இந்திய தொழிலதிபர் எஸ்.பி.சிங் ஓபராய் 
இந்தியா

ஒரே ஒரு பயணியாக ஏர் இந்தியா விமானத்தில் துபை பறந்த இந்திய தொழிலதிபர்!

ஒர் ஒரு பயணியாக ஏர் இந்தியா விமானத்தில் அமிர்தசரஸில் இருந்து துபைக்கு தனந்தனியாக இந்திய தொழிலதிபர் ஒருவர் பறந்துள்ளார். 

DIN


புதுதில்லி: ஒர் ஒரு பயணியாக ஏர் இந்தியா விமானத்தில் அமிர்தசரஸில் இருந்து துபைக்கு தனந்தனியாக இந்திய தொழிலதிபர் ஒருவர் பறந்துள்ளார். 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 10 ஆண்டு தங்குவதற்கான விசா வைத்திருக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலபதிபர் எஸ்.பி.சிங் ஓபராய், பஞ்சாப் அமிர்தசரஸில் இருந்து புதன்கிழமை துபைக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஒரே ஒரு பயணியாக மூன்று மணி நேரம் தனந்தனியாக பயணித்துள்ளார்.  

இதுகுறித்து தொழிலதிபர்  எஸ்.பி.சிங் ஓபராய் கூறியதாவது: விமானத்தில் ஏறியதும், விமான பணியாளர்கள் தவிர, தான் ஒருவர் மட்டுமே இருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். பயணித்தின்போது முதலில் மகாராஜாவை போன்று உணர்ந்ததாக தெரிவித்தவர், விமானத்தில் சக பயணிகள் இல்லாததால் பின்னர் தனகுக்கு சளிப்பு  ஏற்பட்டதாக கூறினார். 

"வாழ்க்கையில் சில நேரங்களில் முக்கியமான சூழ்நிலைகளில் நாம் வாழ்க்கையை மதிக்கத்தக்க வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணமும் அப்படிதான் "மறக்கமுடியாத" பயணமாக அமைந்துவிட்டது. இதற்காக, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இந்திய அரசாங்கத்தை மிகவும் பாராட்டுகிறோம், முற்றிலும் அற்புதமான "மறக்கமுடியாத" பயணமாக மாற்றிய சிறப்பு சேவைகளுக்காக ஏர் இந்தியாவுக்கு நன்றி," என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஓபராய் ஆசிய கட்கா அறக்கட்டளையின் தலைவரும், அபெக்ஸ் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவருமான சர்பத் டா பாலா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆவார்.

ஒருவர் மட்டும்மே துபைக்கு செல்வதற்கு பயணச் சீட்டு பெற்றுள்ளதால் ஆரம்பத்தில், அவரது பயணச் சீட்டை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்திருந்தது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முழு தடுப்பூசி செலுத்திக்கொண்டது உள்பட பயண தொடர்பான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியதை அடுத்து மத்திய விமானப் போக்குவரத்து துறையின் தலையிட்டால், அவரை மட்டுமே அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா விமானம் துபை பறந்துள்ளது. 

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதிகரிப்பால் ஏப்ரல் 24 முதல் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும், சேவைகள் நிறுத்ததிற்கு மத்தியில் தூதர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்குவதற்கான விசா வைத்திருப்பவர்கள் மற்றும் எமிரேடிஸ் ஆகியோர் இந்தியாவில் இருந்து பயணிக்க ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT