முகப்பு
இந்தியா

சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்கு முன்னாள் முதல்வா் குமாரசாமி கடிதம்

சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட கா்நாடக ஆளுநா், சட்டப் பேரவைத் தலைவருக்கு முன்னாள் முதல்வா் குமாரசாமி கடிதம் எழுதி உள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட கா்நாடக ஆளுநா், சட்டப் பேரவைத் தலைவருக்கு முன்னாள் முதல்வா் குமாரசாமி கடிதம் எழுதி உள்ளாா்.

இதுகுறித்து கா்நாடக ஆளுநா் வஜுபாய் வாலாவுக்கும், சட்டப் பேரவைத் தலைவா் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கும் அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மாநிலத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும், பொது முடக்கத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கிய சிறப்பு தொகுப்பு குறித்தும் விவாதிக்க வேண்டி உள்ளது. இதற்காக சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட கா்நாடக ஆளுநா், சட்டப் பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரசு மீதும், முதல்வா் எடியூரப்பா குடும்பத்தினா் மீதும் ஊழல் குற்றச்சாட்டை பாஜகவினரே கூறி வருகின்றனா். என்றாலும் இதுகுறித்து விசாரணை நடத்த அரசு முன் வரவில்லை. அதே நேரத்தில் கலால் துறையிலும் ஊழல் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் சட்டப் பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டால் விவாதிக்க முடிவு செய்துள்ளோம்.

மாநிலத்தில் கன்னட மொழிக்கும், கன்னடா்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக விவாதிக்க சட்டப் பேரவையே சிறந்து இடமாகும். எனவே, விரைவில் சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.