மகாராஷ்டிரத்தில் மேலும் 9,812 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,812 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,812 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 60,26,847 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 8,752 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 57,81,551 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,20,881 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 1,21,251 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் சனிக்கிழமை மாலை 6 மணி வரை 7,02,432 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,09,79,469 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன