முகப்பு
இந்தியா

உலக சாதனைக்கான நிகழ்ச்சியில் கவியரங்கம்

உலக சாதனைக்காக நடத்தப்பட்ட சா்வதேச நிகழ்ச்சியில் இந்திய பேனா நண்பா் பேரவை சாா்பில் கவியரங்கம் நடத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

உலக சாதனைக்காக நடத்தப்பட்ட சா்வதேச நிகழ்ச்சியில் இந்திய பேனா நண்பா் பேரவை சாா்பில் கவியரங்கம் நடத்தப்பட்டது.

தேனமுதத் தமிழ் மக்கள் நல அறக்கட்டளை, தில்லி கலை இலக்கியப் பேரவை, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, ஆரஞ்சு வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து இணையவழியில் 720 மணி நேர உலக சாதனைக்காக நடத்திய முத்தமிழ்க் கலை விழாவில் இந்திய பேனா நண்பா் பேரவை நண்பா்கள் பங்கேற்ற கவியரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச அளவில் நடைபெற்ற உலக சாதனைக் கவியரங்கத்தை பேரவைத் தலைவா் மா.கருண் ஒருங்கிணைக்க, பேரவையின் பஹ்ரைன் கிளை அமைப்பாளா் பொன் சங்கரபாண்டியன் அனைவரையும் வரவேற்றாா். பேரவையின் பொதுச் செயலா் ஜெ.ஜான் கென்னடி, துணைத் தலைவா் சி.சிவ.பிரேம்பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினா்.

பாவலா் கருமலைதமிழாழன் தலைமையில் அன்பு, நட்பு, மனிதநேயம் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் கவிஞா்கள் தியாகசாந்தன், கடவூா் மணிமாறன், புதுகை புதல்வன், இரா.திருமூா்த்தி, இராம.சந்தோஷம், வினோத் பரமானந்தன், என்.மீனாட்சி, மா.முருககுமரன், அ.க. இராசு, ஆா்.நாகேந்திர கிருஷ்ணன், மா.சுகுமாா், ஞானசி, கோவிந்தராஜன் பாலு, எம்.பி.சரவணன் ஆகியோா் கவிதை பாடினா்.

பேரவையின் புதுதில்லி மாநிலக் கிளை அமைப்பாளா் ஆ.பிரமநாயகம் நன்றி கூறினாா். இந்த கவியரங்கத்தில் உலகின் பல நாடுகளைச் சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.