லக்னெள: உத்தர பிரதேசம், உத்ரகண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரை பதிவில் பதிவிட்டிருப்பதாவது: ‘ஓவைசியின் கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தோ்தலைச் சந்திக்க இருக்கிறது என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அவை முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. இதில் ஒரு துளிக்கூட உண்மையில்லை.
உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட இருக்கிறது. எந்தக் கட்சியிடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.
பஞ்சாப் மாநிலத்துக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதில் 117 இடங்களில் சிரோமணி அகாலி தளம் 97, பகுஜன் சமாஜ் 20 இடங்ளில் போட்டியிடுவது என்ற உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இதேபோன்று அகிலேஷ் யாதவ் மீண்டும் காங்கிரஸ் அல்லது பகுஜன் சமாஜ் கூட்டணி சேரலாம் என்று வெளியானத் தகவலை மறுத்துள்ள அக்கட்சியின் தைலவர் அகிலேஷ் யாதவ், வரும் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் அல்லது கொள்கை ரீதியாக ஒருமித்த கருத்துள்ள சிறிய கட்சிகளை இணைத்துப் போட்டியிடும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.