தில்லியில் இன்று மேலும் 89 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,33,934ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 4 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24,965ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,568 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவிலிருந்து இன்று 285 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,07,401ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 54,297 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் உள்பட மொத்தம் 74,198 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக தில்லியில் நோய் தொற்றுபாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே குறைவாக இருந்து வருகிறது.
தில்லி அரசு அண்மையில் பொதுமுடக்க தளா்வுகளை அறிவித்தது. ஆனால், தற்போது சந்தைகளிலும் பொது இடங்களிலும் கூட்டம் அதிகரித்து வருவதையும் தில்லி அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், மூன்றாவது அலை எந்த நேரமும் ஏற்படலாம் என்கிற நிலையில் அதற்கு அரசு தயாராகி வருகிறது.