ஆந்திரத்தில் காலை 6 முதல் இரவு 9 வரை தளர்வுகள்: அரசு அறிவிப்பு
ஆந்திரத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் ஆந்திரத்தில் மே 5-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 8 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தளர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. இதனால் இந்த தளர்வை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
மதுபானக் கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவை இரவு 9 மணிக்கு பிறகு திறக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.