இந்தியா

பஞ்சாபில் ஆம் ஆத்மி வென்றால் இலவச மின்சாரம்: அரவிந்த் கேஜரிவால்

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அரவிந்த கேஜரிவால் வெளியிட்ட டிவிட்டரில்,

அதிக செலவுகளுக்கிடையே குடும்பம் நடத்துவது பெண்களுக்கு மிகவும் சிரமமாக உள்ள காரணத்தால், தில்லியில் அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

பஞ்சாபில் உள்ள பெண்களும் மகிழ்ச்சியின்றி உள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாபிற்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாளை சண்டீகரில் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க அனைத்துக் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றது.

இந்நிலையில், பஞ்சாப் பேரவையின் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் கடந்த வாரம் சண்டீகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். இந்நிலையில், நாளை மீண்டும் சண்டீகர் செல்லவுள்ளார்.

இந்த பயணத்தின் போது செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது மேலும் பல தேர்தல் வாக்குறுதிகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT