இந்தியாவில் புதிதாக 46 ஆயிரம் பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,02,79,331 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 58,578 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5,72,994 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,93,09,607 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 96.80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 979 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 3,96,730 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி:
நாட்டில் இதுவரை மொத்தம் 32.36 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதிய மைல்கல்லாக தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது.