மாநிலங்களின் கையிருப்பில் 1.15 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 1.15 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 1.15 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"மத்திய அரசு விலையில்லாமல் வழங்கியது மற்றும் மாநிலங்கள் நேரடிக் கொள்முதல் மூலம் பெற்றது என மொத்தம் 31,69,40,160 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 30,54,17,617 பயன்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் 1.15 கோடி (1,15,22,543) தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் பயன்படுத்தப்படாமல் உள்ளன."
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,21,268 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 32,36,63,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.