முகப்பு
இந்தியா

பேரவைத் தேர்தல்: ராகுலுடன் பஞ்சாப் காங். தலைவர் நாளை சந்திப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நாளை (ஜூன் 29) சந்திக்கவுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
நவ்ஜோத் சிங் சித்து
பகிர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நாளை (ஜூன் 29) சந்திக்கவுள்ளார். 

அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிய நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாபில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார். கடந்த வாரம் பேரணி மேற்கொண்ட நிலையில், பஞ்சாபில் செய்தியாளர் சந்திப்பையும் நடத்தி வருகிறார். பஞ்சாபில் சீக்கிய மதத்தை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நாளை சந்திக்கவுள்ளார். 

இதில் பஞ்சாப் தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017- சட்டப்பேரவைத் தேர்தல்:

2017 பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. முன்பு ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் 15 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் மட்டுமே வென்றன.

முழு கட்டுரையைப் படிக்க →