இந்தியா

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி: கேரள முதல்வர்

DIN


கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வது பற்றி அவர் கூறியது:

"கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களால் இறுதிச் சடங்கு செய்ய முடிவதில்லை. இது கூடுதல் மன உளைச்சலை உண்டாக்குகிறது. இதைச் சரி செய்யும் வகையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. உடல்களை ஒரு மணி நேரம் மட்டும் வைத்துக்கொள்ளலாம்."

இதைத் தொடர்ந்து, கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அவர் கூறுகையில், "புதிதாக 13,550 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 104 பேர் பலியாகியுள்ளனர். 10,283 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 27,97,779 பேர் குணமடைந்துள்ளனர்.

நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11 சதவிகிதம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT