கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என்றும் தளர்வுகள் அறிவிக்கக் கூடாது எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையொட்டி பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. எனினும் தற்போது கரோனா பரவல் குறாஇந்து வருவதால், தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறையவில்லை. தலைநகரான தில்லியில் கரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிடும்.
எனினும் கடந்த ஒன்றரை ஆண்டுகால அனுபவத்தில் எதற்கும் விரைவில் தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் என்பதை அறிந்துகொண்டோம். மக்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் முழுமையாக தளர்வுகள் வழங்கக் கூடாது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.