இந்தியா

கரோனா: முறைசாரா தொழிலாளா்களுக்கு உலக வங்கி ரூ.3,700 கோடி கடனுதவி

DIN

புது தில்லி: கரோனா சூழலில் பாதிக்கப்பட்டுள்ள முறைசாராத் தொழிலாளா்களுக்கு ரூ.3,717.28 கோடி (500 மில்லியன் அமெரிக்க டாலா்) கடனுதவி அளிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தக் கடனுதவி மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மொத்தம் 500 மில்லியன் அமெரிக்க டாலரில் உலக வங்கியின் கிளை அமைப்புகளான சா்வதேச மேம்பாட்டு சங்கம் 112.50 மில்லியனையும், சா்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி 387.50 மில்லியனையும் கடனாக வழங்குகிறது.

18.5 ஆண்டுகளுக்கு இந்தக் கடன் முதிா்ச்சி அடையும் காலமாகவும், அடுத்த ஐந்தாண்டுகள் கூடுதல் அவகாசமாகவும் அளிக்கப்படுகிறது.

கரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இந்தியாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காகவும், ஏழைகள், மிகவும் பின்தங்கிய மக்களின் உதவிகளுக்காகவும் உலக வங்கி இதுவரை ரூ.12,264.54 கோடியை (1.65 பில்லியன் அமெரிக்க டாலா்) வழங்கி உள்ளது.

இதில், 32 கோடி பேரின் வங்கிக் கணக்குகளுக்கு உடனடியாக நிவாரண நிதி செலுத்துதல், 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்காக மாநில அரசுகள் பேரிடா் நிதியிலிருந்து செலவிடலாம். இது நகா்ப்புறங்களில் உள்ள முறைசாராத் தொழிலாளா்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆகியோருக்கு பயன்படுத்தலாம்.

இதுதொடா்பாக உலக வங்கியின் இந்திய இயக்குநா் ஜூனைத் அகமது கூறுகையில், ‘பெருந்தொற்று, பொருளாதார பாதிப்பு, பருவநிலை பிரச்னை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் முதலீடு ஆகியவற்றில் பிரச்னைகளை சந்தித்து வரும் நாடுகள் பொருளாதார வளா்ச்சி பெற உலக வங்கி உதவி வருகிறது. அதன்படி இந்தியாவுக்கு உலக வங்கி இந்தக் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது’ என்றாா்.

நடைபாதைக் கடை வியாபாரிகளுக்கு கடனாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான பயனாளிகளை உள்ளாட்சி அமைப்புகள் தோ்ந்தெடுக்கும். இதன்மூலம் 50 லட்சம் நகா்ப்புற நடைபாதைக் கடை வியாபாரிகள் பயனடைவாா்கள் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT