பிரியங்கா காந்தியுடன் பஞ்சாப் காங். தலைவர் சந்திப்பு
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து தில்லியில் இன்று (ஜூன் 30) சந்தித்து பேசினார்.
ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடைபெற இருந்த நிலையில், பிரியங்கா காந்தியை சந்தித்து நவ்ஜோத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நேற்று (ஜூன்29) இந்த சந்திப்பு நடைபெற இருந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்துவை சந்திப்பதை ராகுல் காந்தி புறக்கணித்தார்.
அதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தியை நவ்ஜோத் சிங் சந்தித்தார். தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காங்கிரஸின் அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைக்கவே முயற்சிப்பதாக பிரியங்கா தெரிவித்தார்.