முகப்பு
Boy killed, 2 injured in Bihar bomb blast
இந்தியா

பிகாரில் குண்டுவெடிப்பு: சிறுவன் பலி, 2 பேர் காயம்

பிகாரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் காயமடைந்தனர். 

இந்தியா

பிகாரில் குண்டுவெடிப்பு: சிறுவன் பலி, 2 பேர் காயம்

பிகாரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் காயமடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
Boy killed, 2 injured in Bihar bomb blast
பகிர்:

பிகாரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் காயமடைந்தனர். 

ஞாயிற்றுக்கிழமை மாலை பகவான் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மூன்று குழந்தைகள் விளையாடியுள்ளதாகக் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

சிறுவர்கள் விளையாடும்போது அங்கிருந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து பலத்த காயமடைந்த மூன்று சிறுவர்கள் சிகிச்சைக்காக சதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காகரியா துணை காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் தெரிவித்தார். 

ஆனால் ஒன்பது வயது சிறுவன் மொகமது குர்பன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

தாக்குதல் நடத்துவதற்காக சிலர் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருக்கலாம் என்று குமார் கூறினார். அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுத் தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .
 
முழு கட்டுரையைப் படிக்க →