இந்தியா

பாஜகவை வீழ்த்தினாலும், ஆர்.எஸ்.எஸ். ஆட்களை வெளியேற்ற முடியாது: ராகுல்

DIN


பாஜகவைத் தேர்தலில் வீழ்த்தினாலும், அரசு அமைப்பு முறைகளிலிருந்து ஆர்எஸ்எஸ் ஆட்களை வெளியேற்ற முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் கௌசிக் பாசுவுடன் ராகுல் காந்தி காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.

அப்போது ராகுல் கூறியது:

"பாஜக, பகுஜன் சமாஜ், சாமஜவாதி கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் குறித்து ஒருவரும் கேள்வியெழுப்பியதில்லை. ஆனால், அவர்கள் காங்கிரஸ் குறித்து மட்டுமே கேள்வியெழுப்புவார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. நாங்கள் சித்தாந்தத்தையுடைய கட்சி. அரசியலமைப்பின் சித்தாந்தம்தான் எங்களது கட்சியின் சித்தாந்தமும். எனவே, நாங்கள் ஜனநாயகத் தன்மையுடன் இருப்பது மிகவும் முக்கியம்.

மணிப்பூர் ஆளுநர் அரசியலமைப்புப் பதவியை வகிக்காமல் ஏதோ சித்தாந்தத்தின் பதவியை வகித்திருப்பதாக எண்ணி அவரது வேலையை செய்யாமல் இருப்பார் என அந்த மாநில எம்.பி.க்கள் கூறுவார்கள். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்திருப்பதால் ஜனநாயக நடைமுறையை வெளிப்படையாகவே சிதைத்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டார்.

அவசர காலத்தில் நடந்தது தவறு. ஆனால், அதற்கும், தற்போது நடைபெறுவதற்கும் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஜனநாயக அமைப்புகளைக் கைப்பற்ற முயற்சித்ததில்லை. எங்களுடைய அமைப்பு அதை அனுமதிக்காது.

ஆர்எஸ்எஸ் அடிப்படையிலேயே வித்தியாசப்படுகிறது. அரசு அமைப்புகளில் அவர்களது ஆட்களை ஆர்எஸ்எஸ் நிரப்புகிறது. பாஜகவைத் தேர்தலில் தோற்கடித்தாலும் அரசு அமைப்பு முறையிலிருந்து அவர்களை எங்களால் வெளியேற்ற முடியாது."   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT