சத்தீஸ்கர் காவல் துறையில் 13 திருநங்கைகள் காவலர்கள் நியமனம் 
இந்தியா

சத்தீஸ்கர் காவல்துறையில் 13 திருநங்கைகள் காவலர்களாக நியமனம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் காவல்துறையின் காவலர் பணிக்கு 13 திருநங்கைகள் நியமனம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தின் காவல்துறையின் காவலர் பணிக்கு 13 திருநங்கைகள் நியமனம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் 2019-20ஆம் ஆண்டுக்கான காவலர் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் கான்ஸ்டபிள் பணிக்கு 13 திருநங்கைகள் தேர்வு பெற்றுள்ளனர். 

தேர்வான திருநங்கைகள் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநில காவல்துறை இயக்குனர் டி.எம்.அவஸ்தி, காவலர்களாக தேர்வு பெற்றுள்ள திருநங்கைகளுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வரை நாட்டில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே திருநங்கைகள் காவலர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT