இந்தியா

வாகன எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தயார்: பிரதமர் மோடி

PTI

நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பொது பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி  பேசினார்.

அப்போது, இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதில் முக்கியப் பங்கு இளைஞர்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக உருவாக்குவதே. ஒரு இளைஞருக்கு தான் பெற்ற கல்வி, தன்னுடைய திறன், அறிவு மீது நம்பிக்கை வரும் போதுதான் தன்னம்பிக்கைப் பிறகும் என்றார்.

மேலும், நாட்டில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது. எதிர்கால எரிபொருளாக கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு அடுத்தபடியாக, கல்வி, திறன், ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு போன்றவற்றுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்ககுவிக்கப்பட்டுள்ளது என்றும் மோடி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT