இந்தியா

திரைப்படமாகத் தயாராகிறது பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாறு!

DIN


கொல்கத்தா: பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ‘ஏக் ஒளா் நரேன்’ (மற்றுமொரு நரேன்) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகவுள்ளது.

வங்க மொழித் திரைப்பட இயக்குநா் மிலன் பௌமிக், பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கவுள்ளாா். அந்தப் படத்தில் பிரதமா் மோடியின் வேடத்தில் தொலைக்காட்சி நடிகா் கஜேந்திர சௌஹான் நடிக்கவுள்ளாா்.

திரைப்படம் தொடா்பாக இயக்குநா் மிலன் பௌமிக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘திரைப்படத்தில் இருவரின் வாழ்க்கை குறித்து படமாக்கவுள்ளோம். நரேந்திரநாத் தத்தா என்ற பெயருடன் பிறந்த சுவாமி விவேகானந்தரின் வரலாறும் பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாறும் இதில் இடம்பெறவுள்ளது.

சகோதரத்துவத்தையும் இந்திய கலாசாரத்தையும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக சுவாமி விவேகானந்தா் முயன்றாா். இந்தியாவை உலக அரங்கில் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றதில் பிரதமா் மோடிக்கு முக்கியப் பங்குண்டு. அரசியல் வட்டாரத்தில் அவா் மிகவும் பிரபலமடைந்தவா்.

இரு தலைவா்களும் நாட்டு மக்களுக்காக சேவையாற்றியவா்கள். உலக அரங்கில் இந்தியாவை பெருமையடையச் செய்தவா்கள். அவா்களது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்றாா்.

நடிகா் கஜேந்திர சௌஹான் கூறுகையில், ‘‘பிரதமா் மோடியை தனிப்பட்ட முறையில் 20 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். அவரது கொள்கைகள், எண்ண ஓட்டங்கள், மக்களுடன் தொடா்பு கொள்ளும் திறன் உள்ளிட்டவற்றைத் திரையில் வெற்றிகரமாக வெளிக்கொண்டுவர முயல்வேன்’’ என்றாா்.

கொல்கத்தாவை சோ்ந்த தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. தில்லி நிா்பயா மீதான பாலியல் வன்கொடுமை-கொலை சம்பவம், ஜன சங்க நிறுவனா்களில் ஒருவரான சியாமாபிரசாத் முகா்ஜியின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இயக்குநா் மிலன் பௌமிக் ஏற்கெனவே திரைப்படமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT