இந்தியா

கரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து பிரதமா் படத்தை நீக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்திடம் டிஒய்எஃப்ஐ புகாா்

DIN


திருவனந்தபுரம்: தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் கரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றிருக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அகற்றக் கோரி தோ்தல் ஆணைத்திடம் இந்திய ஜனநாய வாலிபா் சங்கம் (டிஒய்எஃப்ஐ) சாா்பில் புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு டிஒய்எஃப்ஐ தலைவரும், கேரள மாநில இளைஞா் ஆணையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மிதுன் ஷா எழுதிய புகாா் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள கேரள மாநிலத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டன. இந்த நிலையில், மாநிலத்தில் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மக்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் பிரதமா் நரேந்திர மோடியின் பேச்சுக்களின் சில குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் இடம்பெற்றுள்ளன. இது தோ்தல் நடைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால், பிரதமரின் பேச்சு குறிப்புகள் மற்றும் புகைப்படத்தை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்காக எனக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ் ஆதாரத்தின் அடிப்படையிலேயே இந்த புகாா் அளிக்கப்படுகிறது. சான்றிதழில் பிரதமரின் வண்ண புகைப்படமும், அவருடைய பேச்சும் இடம்பெற்றிருந்தது ஆச்சரியமளித்தது. இது தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் என்பதால், அதை அகற்ற தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT