இந்தியா

காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ ராஜிநாமா

4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ கட்சியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தார்.

DIN


4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ கட்சியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில், கட்சியில் நீடிப்பது கடினமானது என சாக்கோ குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தில்லியில் சாக்கோ கூறியது:

"காங்கிரஸில் தற்போது ஜனநாயகம் இல்லை. மாநில காங்கிரஸ் குழுவுடன் வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. எனது ராஜிநாமாவை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளேன். 

காங்கிரஸ் தலைவராக இருப்பது கடினமானது. காங்கிரஸில் ஏதேனும் ஒரு அணியைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே கட்சியில் நீடிக்க முடியும். காரணம் கட்சித் தலைமை சொல்லிக்கொள்ளும்படியளவில் செயல்பாட்டில் இல்லை.

உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா இடையே கேரள காங்கிரஸ் பிரிந்து கிடக்கிறது. நீண்ட நாள்களாக இதுகுறித்து சிந்தித்து வருகிறேன். கேரளத்தில் காங்கிரஸே இல்லை. காங்கிரஸ் 'ஐ', காங்கிரஸ் 'ஏ' என இரண்டு உள்ளது.

அணி சேர்ப்பதுதான் கேரள காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய சாபம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கொடுந்துயரத்தில் அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

பாரிஸில் வசந்தம்... சானியா ஐயப்பன்!

சைபர் குற்றங்களில் முதலிடம் தனிநபர் தகவல் திருட்டு!

வங்கிக் கணக்கு பாஸ்வேர்டு இப்படி இருக்கவே கூடாது!

சென்னை தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

SCROLL FOR NEXT