முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடியின் தாயார் 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபெண் மோடி முதல் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை போட்டுக்கொண்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடியின் தாயார் 
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபெண் மோடி முதல் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை போட்டுக்கொண்டார். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், 

என் அம்மா இன்று கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டார் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. தடுப்பூசி எடுக்கத் தகுதியுள்ளவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

கடந்த மார்ச் 1ம் தேதி தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்)  முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன் என்றார்.

இதுவரை 2,52,89,693 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.