தில்லியில் மேலும் 425 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 425 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 425 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,44,489 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 257 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், ஒருவர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,31,056 பேர் குணமடைந்துள்ளனர், 10,945 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 2,488 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.