காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.சி. சாக்கோ தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னிலையில் அவரது கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை எனக் கூறி கடந்த 11-ம் தேதி விலகிய நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
கட்சியில் இணைந்தவுடன் சாக்கோ கூறியது:
"இன்றைய சூழலில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை தேவை. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியே பாஜகவுக்கு மாற்றாக வர முடியும். நான் முன்பிருந்த கட்சியில் அதற்கான முன்னெடுப்பை எடுப்பதாகத் தெரியவில்லை."
இதைத் தொடர்ந்து, சரத் பவார் கூறியது:
கேரள முதல்வர் என்னை அழைத்து, பிசி சாக்கோ தேசியவாத காங்கிரஸில் இணைவது மகிழ்ச்சி என்று கூறினார்.
மகாராஷ்டிரத்தில் மெகா கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சரியாக செயல்பட்டு வருகிறது.
இன்றைய சூழலில் நாட்டில் மூன்றாவது அணியின் தேவை உள்ளது. ஆனால், அதற்கு இன்னும் உருவம் கொடுக்கப்படவில்லை. பல்வேறு கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். அதன் தேவையை சீதாராம் யெச்சூரியும் இன்று குறிப்பிட்டிருந்தார்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.