இந்தியா

கர்நாடகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பரிசோதனைகள்: சுகாதாரத் துறை

DIN


கர்நாடகத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன."

அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகரும் இதனை சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT