முகப்பு
இந்தியா

குஜராத்தில் மீண்டும் திரும்புகிறது கரோனா காலம்: இரவு நேர ஊரடங்கு அமல்

குஜராத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,

Updated On : 18 மார்ச், 2021 at 11:45 AM
குஜராத்தில் மீண்டும் திரும்புகிறது கரோனா காலம்: இரவு நேர ஊரடங்கு அமல்
பகிர்:


குஜராத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தவும் அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குஜராத்தின் முக்கிய நான்கு நகரங்களான ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் ஆகியவை, முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களது வழிகாட்டுதலில் மாநகராட்சி நிர்வாகங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் போடப்படும் நிலையில், இதனை மூன்று லட்சமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

முகக்கவசத்தையும், சமூக இடைவெளியையும் கட்டாயமாக்க  உள்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆமதாபாத்தில் இன்று முதல் அடுத்த உத்தரவு வரும் வரை உயிரியல் பூங்காங்கள், ஏரிகள், பூங்காக்கள் ஆகியவை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இரவு நேர ஊரடங்கு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் அதிகரித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு 12 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது. இதனை இரவு 10 மணி முதல் 6 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு ஊரடங்கு மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.

அதுபோல, குஜராத் மாநிலத்துக்கு வெளி மாநிலங்களிலிருந்து வருவோர், கட்டயமாக 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.