இந்தியா

ஜிபிஎஸ் முறையில் வசூல்: ஓராண்டுக்குள் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் - நிதின் கட்கரி 

PTI


புது தில்லி: முற்றிலும் ஜிபிஎஸ் முறையிலேயே கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு, அடுத்த ஓராண்டுக்குள் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 93 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் முறையைப் பின்பற்றிய சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை செலுத்துகின்றன. இப்போது வரை 7 சதவீதம் பேர் பாஸ்டேக் எடுக்காமல் இரண்டு மடங்குக் கட்டணத்தை செலுத்துகிறார்கள் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய நிதின் கட்கரி, நான் இந்த அவையில் ஒரு உறுதி மொழியை வைக்கிறேன், அதாவது, வரும் ஓராண்டுக்குள் நாடு முழுவதும் இருக்கும் அனைத்துச் சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும், அதாவது, சுங்கச் சாவடிக் கட்டணம் அனைத்தும் ஜிபிஎஸ் முறையிலேயே வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT