அலகாபாத்: மசூதிகளில் இரவில் ஒலிபெருக்கிகளுக்குத் தடை
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை தலைவர் கே.பி.சிங் வலியுறுத்தியுள்ளார்.
அலகாபாத் பல்கலைக் கழக துணைவேந்தர் அளித்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றையும் காவல்துறை தலைவர் எழுதியுள்ளார்.
அதில் அலகாபாத் உள்ளிட்ட 4 அண்டை மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.