முகப்பு
இந்தியா

கேரள இளைஞருக்கு வாழ்வளித்த கன்னியாகுமரி இளைஞரின் இதயம்

அரவிந்த்.. தற்போது அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது நினைவுகள் நிச்சயம் பசுமையாகவே இருக்கும். அவரது உடல் உறுப்புகள் மூலம் நான்கு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
கேரள இளைஞருக்கு வாழ்வளித்த கன்னியாகுமரி இளைஞரின் இதயம்
பகிர்:


அரவிந்த்.. தற்போது அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது நினைவுகள் நிச்சயம் பசுமையாகவே இருக்கும். அவரது உடல் உறுப்புகள் மூலம் நான்கு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 25 வயது இளைஞர் அரவிந்த், புதன்கிழமை உயிரிழந்தார். கன்னியாகுமரியைச் சேர்ந்த அரவிந்த், திருவனந்தபுரத்தில் உள்ள கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் ஆதிலிங்கம் - சுஷீலா ஆகியோர் முன் வந்தனர்.

உடனடியாக வியாழக்கிழமை அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அங்கிருந்து கொச்சியில் இதய நோயால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளைஞர் சூரியநாராயணுக்கு பொருத்தப்பட்டது. சிறுநீரகம், கல்லீரல் போன்றவையும் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. 

காவல்துறை, மருத்துவத் துறை, போக்குவரத்துத் துறை என அனைவரது ஒத்துழைப்பாலும், இதயம் மற்றும் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் மிக விரைவாக நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 4 பர் மறுவாழ்வு பெற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →