இந்தியா

40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கேரள இடது முன்னணி

DIN

நடைபெற உள்ள கேரள மாநில சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆளும் இடது முன்னணி சனிக்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

நடைபெற உள்ள 5 மாநில சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் கேரளத்தில் ஆளும் இடது முன்னணி சனிக்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்தத் தேர்தல் அறிக்கையில் புதிதாக 40 லட்சம் வேலைவாய்ப்புகள், இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை, தொழில்துறையில் ரூ.10,000 கோடி முதலீடு, பல்வேறு பயனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் சனிக்கிழமை வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT