மகாராஷ்டிரம் ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 4 பேர் பலி 
இந்தியா

மகாராஷ்டிரம்: ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி

மகாராஷ்டிரத்தின், ரத்னகிரி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை அடுத்தடுத்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. 

PTI

மகாராஷ்டிரத்தின், ரத்னகிரி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை அடுத்தடுத்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. 

கெத் தாலுகாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ள ஒரு அலகுகளில் இன்று காலை 9 மணியளவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

வெடி விபத்தைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சுமார் 40-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பலத்த காயம் அடைந்த மற்றொரு தொழிலாளி சிகிச்சை பெற்று வருவதாக ரத்னகிரியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலையில் உள்ள ஒரு கொதிகலனில் அதிக வெப்பம் ஏற்பட்டதன் காரணமாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT