முகப்பு
இந்தியா

பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி: மேற்கு வங்கத்தில் அமித் ஷா வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் பாலர் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா வாக்குறுதியளித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:


மேற்கு வங்கத்தில் பாலர் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா வாக்குறுதியளித்துள்ளார்.

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணமூல், பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி பிரதான கட்சிகளாகப் போட்டியிடுகின்றன. இதற்கான தேர்தல் அறிக்கையை அமித் ஷா கொல்கத்தாவில் வெளியிட்டுள்ளார்.

இதன்பிறகு பேசிய அவர்:

"இது வெறும் வாக்குறுதி அல்ல. மேற்கு வங்க மாநிலத்துக்கு நாட்டின் பெரிய கட்சியின் தீர்மான கடிதம். மாநில அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். மேற்கு வங்கத்தில் ஊடுருபவர்களை அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளோம். எல்லைகள் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். 70 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு அகதியின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 என மொத்தம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

பாலர் வகுப்பு முதல் முதுகலை வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்க முடிவெடுத்துள்ளோம்."

முழு கட்டுரையைப் படிக்க →