தில்லியில் புதிதாக 888 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 888 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தில்லியில் புதிதாக 888 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 888 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,48,872 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 565 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,33,975 பேர் குணமடைந்துள்ளனர். 10,963 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் 3,934 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.