முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 46,951 பேருக்கு கரோனா; 212 பேர் பலி

இந்தியாவில் புதிதாக 46,951 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் புதிதாக 46,951 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 46,951 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 30,535 பேரும், பஞ்சாபில் 2,669 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். 
இந்தியாவில் தற்போது 3,34,646 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். நாட்டில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,11,51,468 -ஆகபதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21,180 போ் புதிதாகக் குணமடைந்துள்ளனா். 
கரோனாவுக்கு மேலும் 212 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,59,967ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 23,44,45,774 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 8,80,655 மாதிரிகள் நேற்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்டன. 
இன்று காலை 7 மணி வரை நாடு முழுவதும் 4,50,65,998 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments