இந்தியா

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு: ஒடிசாவில் நிறைவேற்றம்

DIN

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 15% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முன்மொழிவை கடந்த ஆண்டு மாநில அமைச்சரவை வழங்கியது. அதனைத் தொடர்ந்து உயர்மட்ட குழுவை மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் அமைத்தது. 

இந்நிலையில் அந்த குழுவின் பரிந்துரைப்படி மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை முதல்வர் நவீன் பட்நாயக் தாக்கல் செய்தார். 

அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT