மாநிலங்களவையில் பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை 
இந்தியா

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க அதிமுக வலியுறுத்தல்

ஐநாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தினார்.

DIN

ஐநாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தினார்.

இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சாா்பில் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பில் மத்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஐநா மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக் கோரினார்.

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செயவதாக பிரதமா் நரேந்திரமோடி தெரிவித்ததைக் குறிப்பிட்டு பேசிய தம்பிதுரை இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT