இந்தியா

‘மகாராஷ்டிர பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம்’: குஜராத் அரசு

DIN

அதிகரிக்கும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து வரும் பயணிகள் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்மறை சான்றிதழை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

குஜராத் எல்லைப் பகுதிகளில் அதிக அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளதன் அடிப்படையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

குஜராத்தில்  செவ்வாய்க்கிழமை புதிதாக 1,730 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT