இந்தியா

விவசாயிகள் போராட்டம்: முழு அடைப்புக்கு வடமாநிலங்கள் ஒத்துழைப்பு

DIN


வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு 4 மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய முழு அடைப்பு போராட்டத்தால், அனைத்து சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 121-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு 4 மாதங்கள் நிறைவு பெற்றதையொட்டி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிஷான் மோர்ச்சா சங்கம் மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கு எல்லையின் சாலைகளில் குவிந்த விவசாயிகள்  வாகனங்கள் செல்லாதவாறு சாலைகளை முற்றுகையிட்டனர். 

பஞ்சாப் மாநிலத்திலும் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை திரும்பப் பெற வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், மாணவர் அமைப்புகள், வழக்குரைஞர் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் என பலதரப்பினர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT