இந்தியா

ரிசா்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநா் கே.சி.சக்கரபா்த்தி மறைவு

DIN


மும்பை: ரிசா்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநா் கே.சி.சக்கரபா்த்தி மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 68.

இதுகுறித்து வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2009 முதல் 2014 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக பணியாற்றி ஓய்வுபெற்ற கே.சி.சக்கரபா்த்தி செம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானாா். இவா், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். பின்னா் அவா் ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

சக்கரபா்த்தி வங்கித் துறையில் நுழைவதற்கு முன்பாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவா் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT