இந்தியா

இமாச்சலில் ஏப்.4 வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

DIN

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக என இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் கரோனா நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்தார். எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 61 ஆயிரத்து 616 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT