இந்தியா

ம.பி.: 12 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்

DIN

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தின் 12 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி தலைநகா் போபால், குவாலியா், இந்தூா், உஜ்ஜைனி, விதிஷா, நரசிங்பூா், சௌசாா், ஜபல்பூா், பிதுல், ரத்லம், சிந்த்வாரா, காா்கோன் ஆகிய நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. வாகனப் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை முந்தைய நாளிலேயே வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனா்.

முன்னதாக, மத்திய பிரதேசத்தில் சனிக்கிழமை மட்டும் 2,142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 2,86,407 ஆக அதிகரித்தது. இந்தூா், போபாலில் முறையே 2,834 பேரும், 3,455 பேரும் கரோனா தொற்றுடன் உள்ளனா். முக்கிய நகரங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து இந்தப் பொதுமுடக்க நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் எத்தனை நாள்களுக்குத் தொடரும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

தலைநகா் போபாலில் 20 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT