இந்தியா

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஹோலி பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஹோலி பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. 
இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஹோலி பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம், பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹோலி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவி, ஒருவருக்கு ஒருவர் ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். 
மேலும் பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்ததோடு நடனமாடியும் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேசமயம் கரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிர, ஜார்க்கண்ட், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT