முகப்பு
இந்தியா

ஒடிசாவில் புதிதாக 208 பேருக்கு கரோனா பாதிப்பு

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 208 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,40,402 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
ஒடிசாவில் புதிதாக 208 பேருக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 208 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,40,402 ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

ஒடிசாவில் கரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மெல்ல உயர்ந்து வருகின்றது. அதன்படி, தொடர்ந்து ஐந்தாவது நாளாக கரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. 

மேலும், தொற்று காரணமாக ஒருவர் பலியான நிலையில் மொத்த உயிரிழப்பு 1,921 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 1,737 பேர் உள்ளனர். 3,36,691 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

ஞாயிறன்று 26,355 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், இதுவரை மாநிலத்தில் 90 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.