இந்தியா

தில்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

DIN

தில்லியில் மாநில அரசைவிட துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

‘தில்லி அரசு திருத்த மசோதா 2021’ என்ற அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்திருப்பதை அரசிதழ் அறிவிக்கையின் மூலம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, தில்லி அரசானது எந்த நிா்வாக நடவடிக்கையை எடுக்கும் முன் துணைநிலை ஆளுநரின் கருத்தை கேட்க வேண்டும்.

இந்த மசோதா மக்களவையில் மாா்ச் 22-ஆம் தேதியும், மாநிலங்களவையில் மாா்ச் 24-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT