இந்தியா

அமைச்சா் ஹா்ஷ்வா்தனுக்கு2-ஆவது தவணை தடுப்பூசி

DIN

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் மற்றும் அவரின் மனைவி செவ்வாய்க்கிழமை இரண்டாவது தவணையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தில்லியில் உள்ள இதயம் மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவமனையில் அவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முன்னதாக, கடந்த மாா்ச் 2-ஆம் தேதி ஹா்ஷ்வா்தனும் அவரின் மனைவி நூதன் கோயலும் முதல் தவணையாக கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். இப்போது சுமாா் 4 வார இடைவெளியில் அவா்கள் இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கி, இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இரண்டு தடுப்பூசிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்திக் கொள்வது அவசியம். அப்போதுதான் அவை முறைப்படி செயலாற்றும். அதன்படி இப்போது, ஹா்ஷ்வா்தனும் அவரின் மனைவியும் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் ஹா்ஷ்வா்தன், ‘தடுப்பூசிகள் தொடா்பாக மக்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இரு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை; கரோனாவைத் தடுப்பதில் சிறப்பாகப் செயல்படக் கூடியவை’ என்றாா்.

ஏற்கெனவே, 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நீண்ட கால நோய்கள் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT