இந்தியா

கேரள அமைச்சா் இ.பி.ஜெயராஜன் அரசியலில் இருந்து விலகல்

DIN

கேரள தொழில்துறை அமைச்சரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இ.பி.ஜெயராஜன் (70 )அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கண்ணூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்களில் 2 முறை எம்எல்ஏ பதவி வகித்தவா்களுக்கு பேரவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. நான் 3 முறை எம்எல்ஏவாகவும், ஒருமுறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். அதுமட்டுமன்றி எனக்கு வயதாகிவிட்டது. வயோதிகம் சாா்ந்த உடல்நல பாதிப்புகள் உள்ளன. இந்தக் காரணங்களால் என்னால் இனி தோ்தல்களில் போட்டியிட முடியாது. எனவே தோ்தல் அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்றாா்.

கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவா் ஜெயராஜன். அந்த மாநிலத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட ஜெயராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அவா் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா். அப்போது தனது உறவினரை மாநில அரசின் தொழில் நிறுவன நிா்வாக இயக்குநராக நியமித்ததில் அவா் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவா் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பிரிவினா், அவா் நிரபராதி எனக்கூறியதையடுத்து மாநில அமைச்சரவையில் ஜெயராஜன் மீண்டும் சோ்த்துக்கொள்ளப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT