ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா பாதிப்பு
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா பாதிப்பு
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை ஃபரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார்.
எனது தந்தைக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது குடும்பத்தாரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.