இந்தியா

தில்லியில் பெரிய அளவிலான தடுப்பூசித் திட்டம் 3ஆம் தேதி தொடங்கப்படும்: முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

DIN

தில்லியில் பெரிய அளவிலான இலவச தடுப்பூசித் திட்டம் 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதற்கான முன்பதிவு, கோவின் இணையதளத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. எனினும், தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் மத்திய அரசு கூறியுள்ளபடி இன்று தொடங்க முடியாத நிலையில் பல மாநிலங்கள் உள்ளன. 
இந்த நிலையில் தில்லியில் பெரிய அளவிலான இலவச தடுப்பூசித் திட்டம் 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒரு மையத்தில் மட்டுமே இன்று தொடங்கியது. எங்களுக்கு 4.5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளன. இது அனைத்து மாவட்டங்களிலும் விநியோகிக்கப்படுகிறது. தில்லியில் பெரிய அளவிலான இலவச தடுப்பூசி திட்டம் நாளை மறுநாள் முதல் தொடங்கப்படும். தற்போது அது செயல்படுத்தவில்லை. 
ஆக்சிஜன் முக்கிய பிரச்னையாக உள்ளது. தில்லிக்கு தினமும் 976 டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் எங்களுக்கு 490 டன் ஆக்ஸிஜன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு நேற்று மட்டுமே 312 டன் கிடைத்தது. இது எவ்வாறு வேலை செய்யும்?. தில்லிக்கு ஆக்சிஜனை வழங்குமாறு முடிவெடுப்பவர்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் மருத்துவமனைகளுக்கு வெளியே காத்திருக்கிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT