இந்தியா

முன்னறிவிப்பு, பாதுகாப்பு ஏற்பாடின்றி பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம்

DIN


அமிருதசரஸ்: பஞ்சாப் சீக்கிய குரு தேக் பகதூர் 400-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு திடீரெனச் சென்று வழிபாடு நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை, எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல், கூடுதல் பாதுகாப்போ அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல், தில்லியில் குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

சீக்கியர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான குரு தேக் பிறந்த நாள் இன்று. இதையொட்டி பஞ்சாபில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நாளில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட சுட்டுரையில், குரு தேக் பகதூர், கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடி, மனித குலத்தைக் காக்கப் போராடியவர். அவரது உயர்ந்து தியாகத்தால் இன்றும் அழியாமல் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது சுட்டுரையில், ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் வாழ்க்கை, இலட்சியம் மற்றும் உயர்ந்த தியாகத்தை ஒருபோதும் நம்மால் மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT